முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு குறைக்கப்படுமளவுக்கு பாதுகாப்பான சூழல் இருக்கிறதென்றால் வட, கிழக்கில் இராணுவம் ஏன் ?

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு குறைக்கப்படுமளவுக்கு நாட்டில் பாதுகாப்பான சூழ்நிலை இருக்கும் என்றால் ஏன் வடக்கு கிழக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவம் மட்டுமல்ல விமானப்படை, கடற்படையினர் கூட எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதன் மூலம் எங்கள் மக்களின் வாழ்வாதாரம், விவசாயம் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவில் மூன்றில் ஒரு பகுதியை விமானப்படை ஆக்கிரமித்துள்ளது. அதை விடுவிப்பதன் மூலம் காடுகள் பாதுகாக்கப்படும் என்பதுடன் விவசாயத்தை செய்யும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு காணப்படும்.

அரசாங்கம் இவற்றை கருத்திற் கொண்டு முப்படைகளும் ஆக்கிரமித்து இருக்கின்ற நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று கட்சி ரீதியாக நாம் கோருகின்றோம்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு குறைக்கப்படுமளவுக்கு நாட்டில் பாதுகாப்பான சூழ்நிலை இருக்கும் என்றால் ஏன் வடக்கு கிழக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது ஏன் எனக்கேள்வி எழுப்பினார் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button