முச்சந்தி

ஐ.எம்.எப். ஒப்பந்தம் திருத்தப்படுவது உறுதி: வரவு – செலவுத் திட்டத்தில் மக்கள் அறிந்துகொள்ள முடியும்

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட நிபந்தனைகள் 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் பணியாற்ற வேண்டும். அதற்குள், திருத்தங்களைச் செய்யலாம் என நம்புகிறோம்.

நாங்கள் சில திருத்தங்களைச் செய்துள்ளோம். இவற்றை அவர்களுடன் கலந்துரையாடியே முன்வைத்துள்ளோம். வரவு – செலவுத் திட்டத்தில் குறித்த திருத்தங்களுக்கான விதிமுறைகளை நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள்.

வற் வரியை குறைப்பதாக அரசாங்கம் பொய் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள கூற்றை நிராகரிக்கிறோம். உறுதியாக வற் வரி குறைக்கப்படும். எந்தவொரு வரி குறைப்பும் நாடாளுமன்ற சட்டமூலத்தின் ஊடாகவே அமுல்படுத்தப்பட முடியும்.

வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரி குறைப்பு தொடர்பிலான முதலாவது திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button