சூப்பர் ஹீரோக்கள் மீதான ஈர்ப்பு 4 ஆம் மாடியிலிருந்து குதித்த இளைஞன்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்னும் இளைஞன் கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கல்லூரி விடுதி மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

விடுதியின் நான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்ததால் தலையில் காயம், கை, கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபு, சூப்பர் ஹீரோக்களின் திரைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதில் அதிக ஆர்வமுள்ளவர். அதுபோன்று தனக்கும் சக்தி இருப்பதாக நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

அத்துடன் தனக்கு யாரோ சூனியம் வைத்ததாகவும் அதனால் தான் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சூப்பர் ஹீரோக்களைப் போன்று எந்த கட்டிடத்தில் இருந்தும் தன்னால் குதிக்க முடியும் என்றும் பிரபு நம்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button