சதொச ஊழியர்கள் தொடர்பான வழக்கு- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தொடர்பில் புதிய அறிவிப்பு!

சதொச ஊழியர் குழுவொன்றை கடமையிலிருந்து நீக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்திய வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கமைய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபாய் மேலதிக பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button