விமானத்தில் ஒரு இறக்கை!

விமானத்தின் தொழில் நுட்பங்கள் குறித்து தொடர்ந்து வாசித்து வருகிறேன், உண்மையிலேயே எத்தனை பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு இது, ஒவ்வொரு முறையும் அதை வாசிக்கும் போது வியக்கிறேன். இணையத்திலும் ஆயிரக்கணக்கான காணொளிகள் உள்ளது, ஒவ்வொன்றும் இலச்சக்கணக்கான அறிவியல் அடிப்படைகளை, செய்திகளை சுமந்து நிற்கிறது.

அதை எல்லாம் வாசித்தாலும் இந்த விமானத்தில் ஒற்றை இறக்கையில் இந்த படத்தை பார்க்கும் போது எல்லாம் வயிற்றில் ஏதோ ஒரு கதக் தட்டுப்படுகிறது, இருப்பினும் அதை எல்லாம் தாண்டி நாம் பயணிப்பது அறிவியலின் அடிப்படையிலான விமானம் தானே, புஷ்பக விமானம் அல்லவே என்கிற தைரியத்தில் பறக்கிறேன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button