முச்சந்தி

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்: யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனுக்கும் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவுக்கும் இடையிலான சந்திப்பு  அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்குப் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்யா விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ், யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி சம்லி பலுசேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button