கனடாவில், காதல் வலையில் வீழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி

வயோதிப பெண் ஒருவர் காதல் வலையில் சிக்கி பணத்தை இழந்த சம்பவமொன்று கனடாவில் பதிவாகியுள்ளது.

இந்த மோசடி சம்பவத்தில் குறித்த வயோதிப பெண் இருபதாயிரம் டொலர்கள் இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நியூபவுண்ட்லாண்ட்டைச் சேர்ந்த 77 வயதான எலானி ஹார்னும் என்ற பெண்ணே இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தையை இழந்த தமது தாய் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் அண்மையில் புற்று நோய் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் குறித்த பெண்ணின் இரண்டு மகள்களும் தெரிவித்துள்ளனர்.

முகநூல் ஊடாக குறித்த வயோதிப் பெண்ணை ஒருவர் ஏமாற்றி 20000 டொலர்கள் வரையில் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button