கவிதைகள்

அதீத காதலை… கவிதை… மொழி

என்னை நானே சுருட்டி
மூலையில் முடக்கி
வைக்கும் அளவுக்கு
உனதிந்த “காதல்”
இருந்திருக்க வேண்டாம்..

என்னிடம் நீ இவ்வளவு
அதீத காதலை கொட்டி
தீர்த்திருக்க வேண்டாம்..

கொஞ்சம் கெட்டவனாகவே
நீ என்னிடம் வாழ்ந்து விட்டு
போயிருக்கலாம்..

ஓர் நாள் நீயின்றி போனால்
நான் என்ன ஆவேன்
என்று நீ கொஞ்சம்
யோசித்திருந்திருக்கலாம்..

என்னுடன் நீயற்ற
வெற்ற சாலையை கடக்கும்
போதெல்லாம்
என்னுடல் என்னயும் அறியாமல் நடுநடுங்கிறது..

என்னை மறந்து உன் விரலை
காற்றினில் தேடி துளாவுகிறது
எனது கை விரல்கள்…

உன் காதல் இப்படி என்னை
ஏதுமறியா ஒரு குழந்தையை போல்
மாற்றி இருக்க வேண்டாம்..

தாயை இழந்த ஒரு
குழந்தையின்
தேடலாய் என் காதல்
உன்னை தேடி அழுகிறது…

-மொழி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *