ஹமாஸ் கட்டளை மையத்தை இலக்கு வைத்த இஸ்ரேல்: 40 பேர் பலி – மேலும் 60 பேர் காயம

பலஸ்தீனத்தின் தெற்கில் உள்ள மனிதாபிமான மண்டலத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் அப்பகுதியில் உள்ள ஹமாஸ் கட்டளை மையத்தை இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கான் யூனிஸில் இடம்பெயர்ந்தவர்களின் கூடாரங்களை இலக்கு வைத்ததன் விளைவாக காணாமற் போன 15 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுமார் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button