சஜித்தின் அரசாங்கத்தில் பிரதமர் யார்?: கண்டியில் வெளியான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியாக தெரிவானதும் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரில்ல நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கண்டியிலிருந்து பிரதமர் ஒருtர் நியமிக்கப்பட்டது போன்று சஜித் பிரேமதாசவும் செயற்படுவார்.

எதிர்க்கட்சியின் சபைத் தலைவர் என்ற வகையில் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவுக்காக அதிகளவு பணிகளை செய்தவர் என்றும் ஹேஷா விதானகே வலியுறுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும் பண்டார பிரதமராக நியமிக்கப்படுவார் என மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருத்துகள் பகிரப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button