சந்திரிக்காவின் வாக்கு யாருக்கு?: அவரே கூறிய பதில்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் ஜனநாயக முறைமையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு, தேர்வான ஜனாதிபதியிடம் மக்கள் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ள சந்திரிக்கா, தனது வாக்குரிமையை பயன்படுத்துவதாகவும் ஆனால் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட எவருக்கும் முக்கிய பொறுப்பும் கடமையும் உண்டு.அனைத்து வேட்பாளர்களும் சிறந்த கொள்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அதை எவ்வாறு செயற்படுத்துவார்கள் என்பதற்காக காத்திருக்கின்றேன்.

இந்த முன்மொழிவுகளை திருடர்கள் குழுவுடன் செயற்படுத்த முடியாது. மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிருபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். இவ்வாறானவர்களைக் கொண்டு எப்படி அரசாங்கத்தை நடத்தப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் கல்வித்துறை போன்றவற்றில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button