நில அபகரிப்பை நிறுத்துங்கள் – ஜெனீவாவில் அமெரிக்கா வேண்டுகோள்; சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை

இலங்கையின் பொருளாதார மீட்சியை வரவேற்பதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

நிலங்களை மீள ஒப்படைப்பதை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா நீண்டகாலமாக காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் நல்லிணக்கத்திற்கான தடையாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button