கவிதைகள்

பட்டாம்பூச்சி… கவிதை… உதய் 

ஒரு சொல்
ஒரு நினைவூட்டல்
ஒரு கவிதை
ஒரு பாடல்வரி
ஒரு நாள்
ஒரு சந்திப்பு
ஒரு பயணம்
ஓர் அணைப்பு
இப்படிப் பகிரும்
ஏதேனும் ஒன்றும் ஒவ்வொன்றும்
கண்ணில் தட்டுப்படாத
கையில் தொட்டுப்படாத
பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிடக்கூடும்!
பறக்கும்போது
தோள்களைத் தளர்த்தி
நிறை குறைத்துக்கொள்வோம்!
எப்போதும்
பட்டாம்பூச்சி தேடுவது
சிறகுகளின் இளைப்பாறல் குறித்து
சிந்திக்காத காதலின் பிடிவாதம்!
பிடிவாதங்களில்
எதுவும் இயல்பாய்
பிறப்பதில்லை!
உனக்கான
பட்டாம்பூச்சிகளுக்கு
கூடுகளை அடைகாக்கிறேன்!
மனங்களில்
மகரந்தச்சேர்க்கை நிகழத்த
காத்திரு! அடிவயிற்றில்
சீக்கிரம் சிறகடிப்பை
அனுப்பி வைப்பேன்!

-உதய் 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *