“தமிழ் மக்கள் சங்கு சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்“: வவுனியாவில் அரியநேத்திரன் பிரச்சாரம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தலைமையில் வவுனியாவில் தேர்தல் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரியநேத்திரன்,

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல், சர்வதேச விசாரணை மேற்கொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், இறுதி போர் யுத்தத்திற்காக 21 நாடுகள் உதவி செய்துக் கொண்டிருக்கின்றன ஆனாலும் தமிழ் மக்களுக்காக தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

ஆகவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பின்னர் எமது ஜனநாயக ரீதியான பணிகள் தொடரும்” என்றார்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button