அனுர முதலில் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் 

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைக் கோரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க முதலில் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத் தமிழ் மக்களின் ஆதரவைக் கோருவதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்துக் கருத்துரைத்த தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, இனப்பிரச்சினைக்கான தீர்வை, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரால் முன்வைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button