பிரான்ஸில் படகு விபத்து: கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் பலி!

பிரான்ஸ் கரையோரத்தில், ஆங்கிலக் கால்வாயில் பல புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் மற்றும் இருவர் ஆண்கள் என்று அந்நாட்டு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தினை அடுத்து 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவரின் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பிரான்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

படகு அதிகபடியான சுமையை சுமந்து சென்றதே விபத்துக்கான அடிப்படைக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக்கு முன்பு இந்த ஆண்டில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முற்பட்ட 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button