மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு 9 பேர் காயம்

இந்தியா, மணிப்பூர் மாநிலத்தில் குகி மற்றும் மெய்தி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு தொடங்கிய மோதல்கள் இன்னும் முடிவடையவில்லை.

இந்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி வரும் குகி கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் அதிகம் உள்ள இடத்தில் ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத் தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என பொலிஸார் கூறுவதோடு, தாக்குதலில் காயத்துக்குள்ளான பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயர்தொழில்நுட்பம் ஆர்.பி.ஜி (RPGS) ட்ரோன்களை குகி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆயுதம் எதுவும் இல்லாத கிராம மக்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என மணிப்பூர் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button