பாப்பரசர் இந்தோனேசியாவுக்கு விஜயம்

புனித திருத்தந்தை பிரான்சிஸ் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே பாப்பரசரின் இந்தோனேஷியா பயணம் அமைந்துள்ளது.

இப்பயணத்தின் போது சமய ஒற்றுமையின் பிரதிபலிப்பாக, தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள முக்கிய முஸ்லிம் மசூதியையும் கத்தோலிக்க தேவாலயத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையையும் பாப்பரசர் மேற்பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கு நட்பு சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button