முச்சந்தி

மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம்

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம் எப்போதும் கணவனும் மனைவியும் போன்று தான் இருப்பார்கள். தேர்தல் வந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களுக்கு எதிராக பேசுவார்கள்.

முஸ்லீம் காங்கிரஸ் தமிழருக்கு எதிராக பேசுவார்கள். இவ்வாறாக பேசி தத்தமது பக்கம் உள்ள இனரீதியாக சிந்திக்கின்ற மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதை நாம் காண்கின்றோம் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தவிசாளரும் உல‌மா க‌ட்சி தலைவருமான முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அம்பாறை மாவட்டம், கல்முனை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முஸ்லீம் சமூகம் உசுப்பேத்தும் அரசியலுக்கு அடிமையாக இருப்பதை காண்கின்றோம். தேர்தல் அல்லாத காலங்களில் இனவாத அரசியலை விரும்ப மாட்டார்கள். இன ஐக்கியம் என்பார்கள்.

ஆனால் தேர்தல் காலங்களில் வேண்டுமென்றே மக்களை உசுப்பேற்றி தங்களுக்கு வாக்குகளை பெறுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாதத்தை முஸ்லீம்கள் மத்தியில் இணைத்து பிற இனவாதிகளை கொண்டு வந்து அவர்களை பேச வைத்தாவது இனவாதத்தை உருவாக்குவதை காண்கின்றோம்.

எனவே தான் இவ்வாறான அரசியலை செய்ய வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை கேட்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூம் எப்போதும் கணவனும் மனைவியும் போன்று தான் இருப்பார்கள்.

தேர்தல் வந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களுக்கு எதிராக பேசுவார்கள். முஸ்லீம் காங்கிரஸ் தமிழருக்கு எதிராக பேசுவார்கள். இவ்வாறாக பேசி தத்தமது பக்கம் உள்ள இனரீதியாக சிந்திக்கின்ற மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறான அரசியலை உலமா கட்சியாகிய நாம் மறுத்து வருகின்றோம்” என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *