கவிதைகள்

சொல் அம்புகள்… கவிதை… ஷப்ரா

இப்படியும் நடந்ததெனச் சொல்ல
சில விசயங்கள்
வேண்டும் வாழ்வில்
இப்படியும் ஒரு
காலமிருந்ததெனச் சொல்ல
காலத்தின் பசுமையான
சில நியாபக அலைகள்

வேண்டும் வாழ்வில்
எப்படியெல்லாம்
சோதனை காலங்களிலிருந்து
மீண்டு வந்தேனெனச் சொல்ல
சில தடயங்கள் வேண்டும் வாழ்வில்
எப்படியெல்லாம் சிரமப் பட்டு
முன்னேறினேன் எனச் சொல்ல
சில முயற்சியுடனான
முன்னேற்றங்கள் வேண்டும்

வாழ்வில்
யாரெல்லாம் என் கரம் பற்றி
துன்ப காலத்தில்
அரவணைத்துக் கொண்டார்கள்
எனச் சொல்ல
சிலர் வேண்டும் வாழ்வில்
வாழ்வை அறிந்து
அதை பற்றிப் பிடித்திட
முழுக்க முழுக்க முயற்சித்து

இடையில் பல முறை தடம்புரண்டு
சில நினைவுகளில் ஊறி
பல நிஜங்களில் நடமாடி
தடம் மாறி
வாழ்வின் பிடிப்புகளை இழந்து
தன்னந்தனியாக நின்று
இலக்கு ஒன்றை அடைய
எத்தகைய சிரமங்களை
கடந்து இன்று

நல்ல நிலையில் இருக்கிறேன்
எனச் சொல்ல நிஜமாகவே
சில சோகம் கவ்விய நினைவுகள்
துவண்டு போன நொடிகள்
கடந்து வந்த அவமானங்கள்
கீறிக் கிழித்த சொல் அம்புகள்
வேண்டும் மீண்டும் மீண்டுமாய்!

ஷப்ரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *