இந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசாது; மாக்லேவ் தொழில்நுட்பத்தில் சாதித்த சீனா

புதுப்புது விடயங்களை கண்டுபிடிப்பதில் சீனா என்றுமே முதலிடத்தில் இருக்கும். அந்த வகையில் தற்போது ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்கழகம் இணைந்து, அதி வேகத்தில் பயணிக்கக்கூடிய ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

மாக்லேவ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால் விமானத்தை ஒத்த வேகத்தில் இந்த ரயிலால் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

இதற்காக கடந்த வருடம் டத்தோங் நகரில் இதற்கெனவே 2 கிலோமீட்டர் தொலைவில் வழித்தடம் அமைக்கப்பட்டது.

குறித்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்த ரயில் எதிர்பார்த்த வேகத்தில் பயணித்துள்ளது.

இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்க்கு இடையிலுள்ள 1200 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் கடந்துவிட முடியும் என கூறப்படுகிறது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button