தேர்தல் பிரசாரத்துக்கு கோடி கணக்கில் நன்கொடை: மகிழ்ச்சியில் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு தேர்தல் நிதியாக 4.5 கோடி டொலரை (இலங்கை மதிப்பில் ரூ.1000) எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 81), போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலில், எலான் மஸ்க் நடுநிலை வகிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சில தினங்களுக்கு முன், டிரம்பை தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (வயது 20) என்ற நபர் சுட்டார். இதன் பிறகு, தேர்தலில் டிரம்பை ஆதரிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

டிரம்பிற்கு, 4.5 கோடி டொலர் தேர்தல் நிதியாக எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளார்.

டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் நிதி குறித்து, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 இலட்சம் டொலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 இலட்சம் டொலர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்” என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button