சூடு பிடித்துள்ள சூப்பர் 8 சுற்று: அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் கடைசி அணி எது?

நடப்பு T20 உலகக் கிண்ண தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க குழு ஒன்றில் மூன்று அணிகள் இடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் குழு இரண்டில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல் குழு ஒன்றில் இருந்து இந்தியா தகுதிபெற்றுள்ள நிலையில், ஏனைய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

குழு ஒன்றில் இடம்பிடித்துள்ள அவுஸ்திரேலியா ஒரு வெற்றியுடன் நிகர ஓட்டங்களின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியும் ஒரு வெற்றியுடன் நிகர ஓட்டங்களின் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

செயின்ட் வின்சென்ட்டில் இடம்பெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 115 மட்டுமே பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 116 என்ற வெற்றி இலக்குடன் பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் நேரடியாக அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

மாறாக தோல்வியடைந்தால் அவுஸ்திரேலியா அணி நிகர ஓட்டங்களின் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும்.

இதேவேளை, 116 என்ற வெற்றி இலங்கை 13 ஓவர்களில் பங்களாதேஷ் துரத்தியடித்தால் பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.

ஆக, சூப்பர் 8 சுற்றில் குழு ஒன்றில் இருந்து நிகர ஓட்டங்களின் அடிப்படையிலேயே அரையிறுதிக்கு இந்த மூன்று அணிகளில் இருந்து ஒரு அணி தெரிவுசெய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button