3 வயது இலங்கை குழந்தையின் உலக சாதனை

கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் மகன் 3 வயதான மொஹமட் ஷம்லான் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில் சாதனை படைத்துள்ளார்.

இவர் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள்,உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள்,உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரை குழந்தை ஷம்லான் பெற்றுள்ளார்.

இதற்கான நிகழ்வு கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்றது.

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம்,நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி
போன்றோர் பங்கு கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button