மத்தியப் பிரதேசத்தில் பெண்ணைத் தடியால் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவல்

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பொது இடத்தில் நான்கு பேர் பிடித்துக்கொள்ள, ஒருவர் பெரிய தடியால் அவருக்குப் பின்னால் இருந்து தொடர்ந்து தாக்கும் காட்சி ஒன்று காணொளியாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அந்தப் பெண்ணை அசைய விடாமல் பிடித்துக் கொண்டு தடியால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும்போது சுற்றி வேடிக்கை பார்த்த கூட்டம் அதைத் தடுத்து நிறுத்தாமல், கைப்பேசிகளில் அந்தக் கொடூரக் காட்சியை காணொளியாகப் பதிவு செய்யும் வேலையில் இறங்கியிருந்தது. இதுகுறித்து இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தக் காணொளியில் இருக்கும் சிற்றூரையும் அதில் தொடர்புடைய ஆட்களையும் மத்திய பிரதேசக் காவல்துறை அடையாளம் கண்டு ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அந்தப் பெண்ணை தடியால் அடித்ததாகக் கூறப்படும் நூர் சிங் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், இதில் தொடர்புடைய நான்குபேரை காவல்துறை தேடி வருகிறது.

இந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜித்து பட்வாரி, “பாஜக ஆட்சி நடத்தும் மத்தியப் பிரதேச மாநிலமே பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் முதல்நிலை வகிக்கிறது. மேலும் தார் மாவட்டத்தில் அடிக்கடி இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்து வருவது வருத்தத்திற்குரியது.

மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து நடந்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அந்த மாநில அரசு தடுத்து நிறுத்தாதது கவலையளிக்கிறது என்று ஜித்து கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button