பட்டத்தின் பின்னர் கிரீன் கார்ட்?; ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு நடைபெறவுள்ளத் தேர்தலில் மீண்டும் தலைமைப் பதவியை ஏற்பதற்கு மிகுந்த பிரயத்தனம் காட்டி வருகின்றார்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெறும் நிலையில், குடியேற்றக் கொள்கைகளை தளர்த்தவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அமெரிக்க பல்கலைகழகத்தில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு “கிரீன் கார்ட்” அதாவது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கடுமையான கொள்கைகளை கடைபிடித்து வந்த டிரம்ப் இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறையின் மூலம் இந்திய மற்றும் சீன மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்புவதை கட்டுப்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, 2022 – 23 ஆம் கல்வியாண்டின்படி அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button