முச்சந்தி

பிரிக்ஸில் இணையும் புதிய நாடுகளும் … நாணயமும் … ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு 2024…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(டாலருக்கு நிகரான நாணயம் பிரிக்ஸ் நாடுகளில் அறிமுகமாக்க, ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு 2024 நடைபெறவுள்ளது)
வளர்ந்துவரும் நாடுகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயர் பிரிக்ஸ் (BRICS) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியவையே அந்த ஐந்து நாடுகள் ஆகும்.
மாஸ்கோ பல்கலைக்கழக மாநாடு :
மாஸ்கோ மாநில லோமோனோசோவ் பல்கலைக்கழகத்தில் (MSU) பிரிக்ஸ் முன்னோடியாக சர்வதேச அறிவியல் நடைமுறை மாநாடு அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்றது.
மாஸ்கோவில் உலகளாவிய சமூக மாற்றங்களின் சகாப்தத்தில் பிரிக்ஸ் மாநாடு மூன்று பகுதிகளாக நடைபெற்றது, தொடக்க அமர்வு பேராசிரியர் விக்டர் சடோவ்னிச்சி, லோமோனோசோவ் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வரவேற்பு உரையுடன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா விஞ்ஞானிகள் பலரும் கலந்து கொண்டனர். பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே எதிா்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு இந்த மாநாடு வலிகோலியது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீா்திருத்தங்களைப் பின்பற்றுவது தொடா்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இந்தியப் பேராசிரியர் உரை:
இந்த மாநாட்டில் இந்தியப் பேராசிரியர் பேராசிரியர் சஞ்சய் குமார் ரஷ்யாவின் பிரிக்ஸ் தலைமை பதவியின் போது உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மாநாட்டின் முதல் அமர்வின் போது, ​​ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு)
(இன்ஸ்டிடியூட் ஓ இன்டர்நேஷனல் ஸ்டடீஸின்) பேராசிரியர் சஞ்சய் குமார் பாண்டே, “பிரிக்ஸ் – தென்உலகம் இந்தியாவிலிருந்து பார்வை” என்ற தலைப்பில் ஒரு விளக்க உரையை வழங்கினார்.
இந்தப் பிராந்தியத்தில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார், “ரஷ்யாவின் பிரிக்ஸ் தலைமை பதவியின் போது, ​​உலகளாவிய தெற்கின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பொருளாதார ரீதியில் இன்று பிரிக்ஸ் முன்னணியில் உள்ளது, அனைத்து நாடுகளின் மக்களின் ஆழமான மரியாதை, நாகரிக அடையாளம் மற்றும் மதிப்புகள், சமமான உரையாடல் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான விருப்பத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான மையமாக பிரிக்ஸ் உள்ளது.
வரலாற்று அறிவியல், அரசியல் அறிவியல் மருத்துவர், MSU உலகளாவிய செயல்முறைகள் பீடத்தின் UNESC தலைவர் யூரி சயமோவ், உலகளாவிய சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரிக்ஸ் நாடுகள் என்ன பங்கு வகிக்க முடியும் என்பதை விளக்கினார்.
பிரிக்ஸ் என்பது சர்வதேச உறவுகள் மற்றும் உலக செயல்முறைகளில் நாடுகளின் நியாயமான பங்கேற்புக்கான வாய்ப்பைத் திறக்கும் ஒரு வடிவத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது எனவும் கூறினார்.
ஐநா பொதுச் சபையால் 2015 இல் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தினை பிரிக்ஸ் குழுவின் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய நிகழ்ச்சி நிரலைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது உலகளாவிய உலகின் புதிய கட்டமைப்பை பிரதிபலிக்கும் என்று பேராசிரியர் சயமோவ் கூறினார்.
ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு :
ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு எதிர்வரும் அக்டோபர் 2024 இல் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நான்கு புதிய உறுப்பினர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஈரான் மற்றும் எத்தியோப்பியா ஆகியவை அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளன.
கடந்த வருட உச்சிமாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட விரிவாக்கத்தின் காரணமாக இக்கூட்டணி இப்போது ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியாக உள்ளது.
எதிர்வரும் பிரிக்ஸ் 2024 உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் (Kazan) பகுதியில் நடைபெறும் என்றும் விளாடிமிர் புடின் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வளரும் நாடுகளைச் சேர்ந்த பல உலகத் தலைவர்களை கூட்டமைப்பு அழைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு நிகரான, செல்வாக்கு கொண்ட அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குவது உட்பட முக்கியமான பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்‌ஸ் முயல்கிறது.
தென்னாபிரிக்கா மாநாடு:
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாபிரிக்காவில்2023 நடந்தது. பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமையில் இந்த மாநாடு ஜோகன்னஸ்பா்கில் நடைபெற்றது.
அந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க டாலரை முறியடிக்க பிரிக்ஸ் நாணயம் அறிமுகப்படுத்த 44 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆயினும் இந்திய – சீனாவின் பொருளாதார வகிபாகம் மிக வலுமிக்க உறுதியாகவும் இருப்பதால், ரஷ்யாவின் வேண்டுதலுக்கு ஏற்ப, அமெரிக்க டாலருக்கு நிகரான நாணயத்தை அறிமுகம் செய்யவும் முனைந்தனர்.
தற்போது பல்வேறு துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. தெற்குலகின் பிரச்னைகளை விவாதிக்கும் முக்கியத் தளமாக பிரிக்ஸ் மாறியுள்ளது.
 தெற்குலக நாடுகளின் வளா்ச்சி, பன்னாட்டு அமைப்புகளின் சீா்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் பிரிக்ஸ் மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது.
பிரிக்ஸ் தொடர்ந்து வலுப்பெறுமா ?
புதிய நாணயத்தை வெளியிடுவது குறித்து 44 நாடுகள் ஆதரவு என்றும், இந்த பிரிக்ஸ் மாநாட்டில்
விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை (BRICS Currency) வெளியிடப்போவதாக ரஷ்யா கடந்த வருடம் அறிவித்தது.
தொடரும் சந்திப்புகளில் ரஷ்ய நாடு டாலருக்கு எதிரான போக்கை வலுப்படுத்தும் என்பது உறுதி. 44 நாடுகள் எதிர்கால BRICS நாணயத்தைப் பயன்படுத்தும் என்று ரஷ்யா நம்புகிறது.
பிரிக்ஸ் (BRICS) நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் 21 சதவீதம் பெற்றுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் உலக GDPல் தனது பங்கினை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகள் 43 சதவீதத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் இணைந்து சுமார்
$ 4.4. டிரில்லியன் அன்னிய இருப்பை பெற்றுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் பிரிக்ஸின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இதன் உறுப்பினர் நாட்டு அரசாங்கங்கள் ஒன்று சேர்ந்து பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி என்ற வங்கியை தொடங்கியுள்ளார்கள். இதற்கு புதிய மேம்பாட்டு வங்கி (The New Development Bank) என்ற பெயரும் உண்டு.
கடந்த வருட தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க டாலரை முறியடிக்க பிரிக்ஸ் நாணயம் அறிமுகப்படுத்த 44 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆயினும் இந்திய – சீனாவின் பொருளாதார வகிபாகம் மிக வலுமிக்க உறுதியாகவும் இருப்பதால், அமெரிக்க டாலருக்கு நிகரான நாணயத்தை அறிமுகம் செய்வதற்கான
சாத்தியக் கூறுகள் அரிதாகவே காணப்பட்டன.
எதிர்வரும் பிரிக்ஸ் 2024 உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் பகுதியில் நடைபெறும் வேளையில் விளாடிமிர் புடின் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் அமெரிக்க டாலருக்கு நிகரான நாணயத்தை அறிமுகம் செய்வதற்கான
சாத்தியக் கூறுகள் எப்படி இருக்கும் என்பதனை பொருளாதார வல்லுநர்களால் கூட கணிப்பிட முடியாமல் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button