காணி, பொலிஸ் அதிகாரங்களை இரத்தம் சிந்தியாவது தடுப்போம்

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு எவராவது முயன்றால் வீதிக்கு இறங்குவோம் என்பதுடன், இரத்தம் சிந்தியாவது நாட்டை பாதுகாப்போம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வடக்கிற்கு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் 13ஆவது திருத்தத்தை வழங்குவதாக கூறுகின்றார். அதில் என்ன கொடுக்கப் போகின்றார். காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப் போகின்றாரா? அந்த அதிகாரங்கள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கென தனித்தனி அதிகாரங்கள் இருக்க முடியாது. இதனால் வீண் பேச்சுக்களை விடுத்து தமது கொள்கை பிரகடனங்களை வெளியிடுங்கள். மக்கள் எப்போதும் ஏமாற்ற முடியாது. அது இலகுவானது அல்ல.

இதேவேளை காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரையிலும் எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன். எவராவது வழங்க தயாரானால் வீதிக்கு இறங்குங்கள். நாங்கள் இரத்தம் சிந்தியாவது இந்த நாட்டை பாதுகாப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button