ஒன்லைன் ஓர்டரால் அதிர்ந்த பெண்! … கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்!!

கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு பெண் வைத்தியர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தியா – மும்பையின் மலாட் பகுதியில் 27 வயதான பெண் வைத்தியர், ஒன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை ஓர்டர் செய்துள்ளார்.

அப்போது அவர் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அவர், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு ஐஸ்கீரிமுடன் சென்று புகார் அளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கோன் ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அதனை எப்.எஸ்.எல்.க்கு (தடயவியல்) பிரிவுக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தப் பெண் வைத்தியர் ஐஸ்கிரீமில் பாதிக்கு மேல் சாப்பிட்டுள்ளார்.

அந்தநேரத்தில் ஏதோ ஒன்று வாயில் தட்டுப்படவே, ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட சுமார் 2 சென்றி மீற்றர் அளவான மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தில் மலாட் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், “மும்பையின் மலாட் பகுதியில், ஒன்லைனில் ஓர்டர் செய்த கோன் ஐஸ்கிரீம்க்குள் ஒரு மனித விரலின் துண்டை கண்டு ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பிறகு அந்த பெண் உடனடியாக மலாட் பொலிஸ் நிலையத்தை அடைந்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஐஸ்கீரீம் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

மேலும், அந்த ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ்கிரீமில் காணப்படும் மனித உடல் உறுப்பை FSL (Forensics)க்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button