கவிதைகள்
சொல்வதெலாம் உண்மை!… ( கவிதை ) … சங்கர சுப்பிரமணியன்.

கயல்விழி என்றார்கள்கருத்தினில் பதித்து வைத்தேன்மான்விழி என்றார்கள்மனதினில் தேக்கி வைத்தேன்மருள்விழி என்றபோதும்இருளகற்றுமென எண்ணிவந்தேன்அருள்விழி என்றார்கள்அன்புசெய்வாளென காத்திருந்தேன்சிறுவிழியாள் இவளோஎன்சிந்தையை கெடுக்கிறாளேகுறுகிய பார்வையினால்என்னை கொன்று குவிக்கிறாளேஇறுகிய விழிகொண்டுஇதயத்தைத் துளைக்கின்றாளேஅருகிய பார்வையாலேஎன்னை ஆழமாய் உழுகின்றாளே
கம்பன் ஏமாந்தான் என்றாரே கவிஞர்கம்பன் மட்டுமா ஏமாந்தான் – இந்தகொம்பனுமல்லவா இங்கு ஏமாந்தான்நம்புங்க நான் செல்வதெலாம் உண்மை!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()