80 வயது மாமியாரின் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார்.
இந்நிலையில் தற்போது குஷ்புவின் மாமியார் தோனியின் தீவிர ரசிகையாம் இறப்பதற்குள் ஒருமுறையாவது அவரை பார்த்து விடவேண்டும் என ஆசைபட்டாராம். அதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சி எடுத்து மாமியாரின் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் குஷ்பு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button