பிரிட்டிஸ் மகாராணியின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருப்பதற்கு கேட் வில்லியமிற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்- புதிய நூல் வெளியிடும் தகவல்கள் என்ன?

பிரிட்டிஸ் மகாராணியின் இறுதிநிமிடங்களில் அவருடன் இருப்பதற்கான சந்தர்ப்பம் இளவரசர் ஹரியின் மனைவி மேகனால் பறிபோனது என கருதும் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இதன் காரணமாக மேகன்மீது சீற்றத்துடன் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் அரசகுடும்பம் குறித்து வெளியாக உள்ள புதிய நூலில் இந்த  விடயம் இடம்பெற்றுள்ளது.

இளவரசர் ஹரியின் மனைவி பிரிட்டிஸ் மகாராணியை பார்ப்பதை சார்ல்ஸ் விரும்பவில்லை இதன் காரணமாக அவர் வில்லியமின் மனைவியையும் வரவேண்டாம் என தெரிவித்தார் இதன் மூலம் அவர் மேகன்

பிரிட்டிஸ் மகாராணியை உயிருடன் பார்ப்பதை தடுத்தார் என புதிய நூலின் ஆசிரியர் ரொபேர்ட் ஜொப்சன் தெரிவித்துள்ளார்.

ஹரி  தனது மனைவி  பிரிட்டிஸ் மகாராணியை உயிருடன்  பார்க்கவேண்டும் என விரும்பினார் எனினும்   ஹரியின் மனைவி பிரிட்டிஸ்மகாராணியை இறுதியாக ஒரு தடவை பார்ப்பதை  சார்ல்ஸ் விரும்பவில்லை என நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ்மகாராணியை பார்ப்பதற்காக  மேகன் ஸ்கொட்லாந்திற்கு வருவதற்கு  அனுமதிக்கவேண்டும் என  ஹரி வற்புறுத்தினார்,ஆனால் மன்னர் மகாராணியின் பிள்ளைகளிற்கும் பேரப்பிள்ளைகளிற்கும் மாத்திரம் அனுமதியளிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகயிருந்தார் என ரொபேர்ட் ஜொப்சன் தெரிவித்துள்ளார்.

மேகன் வருவது தனக்கு விரும்பவில்லை என தனிப்பட்ட ரீதியில் தெரிவிப்பதற்கு சார்ல்ஸ் விரும்பினார் எனினும் ஹரியிடம் அவரால் இதனை தெரிவிக்க முடியவில்லை அதனால் மன்னர் கேட்டையும் வரவேண்டாம் என தெரிவித்தார் இதன் மூலம் மேகன் பிரிட்டிஸ் மகாராணியைபார்ப்பதை தடுத்து நிறுத்தினார் என ஜொப்சன் தெரிவித்துள்ளார்.

இளவரசர் வில்லியம் மகாராணிக்கு இறுதிவிடை கொடுத்தவேளை தனக்கு அனுமதி மறுக்கப்பட்டமை கேட்டிற்கு சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது இதற்கு மேகன் காரணம் என்பதால் கேட் மேகன் மீது கடும் கோபத்தில் உள்ளார் என ஜொப்சன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button