விஜய் மக்கள் இயக்கம் விரைவில் கட்சியாக மாற்றம்?…
‘விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்பதை விஜய் விரைவில் அறிவிப்பார்” என இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அம்பேத்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தவும் விஜய் தரப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நேற்று மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.
புஸ்ஸி ஆனந்த் கூறுகையில் ”விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா இல்லையா என்பதை விரைவில் விஜய் அறிவிப்பார்” என்றார்.
இதற்கிடையே காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று விஜய் வீட்டின் முன் நின்று ‘விஜய்யுடன் போட்டோ எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
‘ஒரு குழந்தை சமூக வலைதளத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருடன் அலைபேசியில் விஜய் பேசியுள்ளார். நேரில் வந்துள்ள என்னிடம் பேச மாட்டாரா?’ என கேட்டு அழுதுள்ளார்.
![]()