அவுஸ்திரேலியா குறித்த இரகசிய தகவல்களிற்காக வர்த்தகருக்கு சீன உளவாளிகள் பணம் வழங்கினார்கள் – அவுஸ்திரேலிய அதிகாரிகள் தகவல்

அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட இரகசிய தகவல்களை வெளிநாட்டின் முகவர்களிற்கு வழங்கிய  அவுஸ்திரேலிய பிரஜை குறித்து மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு கூட்டணி குறித்த இரகசிய தகவல்களை வழங்கிய இந்த நபருக்கு சீனாவின் உளவாளிகள் பணம்நிரம்பிய என்வலப்பினை  வழங்கினார்கள் என்ற தகவல் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.

கொவிட்காலத்தில் சீனாவில் பணியாற்றிய காலத்தில் கென் எவலைன் என தம்மை அறிமுகப்படுத்திய இரண்டு உளவாளிகளிடம் அலெக்ஸாண்டர் சேர்கோ அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பொருளாதார தேசிய பாதுகாப்பு தகவல்களை வழங்கினார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அவுக்கஸ் மற்றும் குவாட் கூட்டணி குறித்தும் லித்தியம் அகழப்படுவது குறித்தும் தகவல்கள் கோரப்பட்டன என அவுஸ்திரேலிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்பாடல் தொழில்நுட்;ப உட்கட்டமைப்பு ஆலோசகரான அலெக்ஸாண்டர் சேர்கோவை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் காவல்துறையினரும் அவரை பல வாரங்களாக விசாரணை செய்து அவரது தொலைபேசி உரையாடல்களை ஆராய்ந்துள்ளமை  நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

தான் கெவின் எவலைன் என்ற இரண்டு நபர்களையும் சந்தித்தவேளை அவர்கள் உளவாளிகளாகயிருக்கலாம் என சந்தேகித்ததை வர்த்தகர் விசாரணைகளின்போது தெரிவிக்க மறுத்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டு;ள்ள வர்த்தகர் தொடர்ந்தும் இரண்டு வருடங்களாக அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அவர் சீன அரசாங்கத்துடனும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சிற்காக பணியாற்றுபவர்கள் என தான் கருதிய இரண்டு நபர்களுடனும் அவர் தொடர்பிலிருந்தார் என நீதிமன்றத்தில் அரசதரப்பினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button