சிங்கப்பூர் ஆசியாவின் அதிசயம்!… ஜீவன்.
இலங்கையை பார்த்துத்தான் சிங்கப்பூரை லீ அவர்கள் உருவாக்கினார்கள் என தவறாக கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
அவர் இலங்கையில் இருந்த இன பிரச்சனையை பார்த்து இப்படி , சிங்கப்பூர் ஆகிவிடக் கூடாது என மிக கவனமாக கையாண்டார்.
அதாவது சிராங்கூனிலிருந்த இந்திய – இலங்கையர் அதிகமாக வாழ்ந்த லிட்டில் இந்தியா , சீனர்கள் வாழ்ந்த சைனா டவுண் , மலாயர் மற்றும் இஸ்லாமியர் வாழ்ந்த அரப் தெரு ஆகியவற்றை தவிர , எங்குமே தனித்து ஒரே இனம் குழுவாக வாழ விடாமல் , கலந்து வாழும் முறையில் தொடர் மாடிக் கட்டிடங்களை அமைத்து , கலந்தே மக்களை குடியமர்த்தினார். பல்லின கலாச்சாரத்தால் சிங்கப்பூரில் இன பிரச்சனைகள் தோன்றவோ அல்லது தலை தூக்கவோ இல்லை. அப்படி குழப்பம் விளைவித்தோர்கள் சூரிய உதயத்தை மீண்டும் பார்க்கவே இல்லை. வன்முறை மற்றும் வேலை நிறுத்தம் செய்வது போன்றவை அடியோடு இல்லாதொழிக்கப்பட்டது.
ஒருமுறை மேலே குறிப்பிட்ட இனக் குழும பகுதிகளை இல்லாதொழிக்க வேண்டும் எனும் நோக்கம் , லீ அவர்களுக்கு ஏற்பட்ட போது , ஆரம்ப கால சரித்திர சின்னங்களாக அவை இருக்கட்டும் என தெரிவித்த பலரது வேண்டுகோளை அவர் செவிமடுத்து விட்டு விட்டார். ஆனால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படின் அவற்றை இல்லாதொழிக்க தயங்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்தார்.
வெளிநாடுகளது தொழில் துறைகளை சிங்கபூருக்குள் அனுமதித்ததால் மட்டும் சிங்கப்பூர் வளமாகவில்லை. சிக்கலே இல்லாத அமைதியான நாடு என்ற நிலை காரணமாக, அநேக தேசங்கள் அச்சமின்றி முதலீடு செய்தமையாலும்தான் சிங்கப்பூர் ஆசியாவின் அதிசயமானது.
சிங்கப்பூரின் சிற்பி எனக் கருதப்படும் மறைந்த தந்தை , லீ குவான்யூ அவர்களது அர்ப்பனிப்பிலும் , அயராத சிந்தனையிலும் உருவானதுதான் மஞ்சுளா சிங்கப்பூரா.
குடிக்க தேவையான தண்ணீரே இல்லாத ஒரு நாடு , ஆசியாவிலே சிறந்த நாடாக தேர்வாகியுள்ளது.
அறிவார்ந்த நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இவ்வாண்டு சிங்கப்பூர் உலக அளவில் 7வது இடத்தையும் ஆசிய நகரங்களில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
உயர் வாழ்க்கைத் தரத்தை எட்டுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள நகரங்கள் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தித் தீர்வு காண்கின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
சுவிட்சர்லாந்து வணிகக் கழகத்தின் நிர்வாக மேம்பாட்டுக் கழகம் (ஐஎம்டி) வெளியிட்ட இந்தப் பட்டியலில் 141 நகரங்கள் இடம்பெற்று உள்ளன.
சுவிட்சர்லாந்தின் ஸுரிக் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நார்வேயின் ஓஸ்லோ இரண்டாமிடத்தையும் ஆஸ்திரேலியாவின் கேன்பரா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
– ஜீவன்
![]()