குழந்தையை பெத்துக்கோ; சம்பளத்தை கூட்டிக்கோ: சிக்கிமில் ‘கிக்’ அறிவிப்பு
சிக்கிமில் குறைந்து வரும் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் வகையில், அரசு பணியில் உள்ள பெண்கள் 2வது குழந்தைகள் பெற்றால் சிறப்பு ஊதிய உயர்வும், 3வது குழந்தை பெற்று கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என என அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சமீப காலமாக மாநிலத்தில் குழந்தைகள் பெற்று கொள்ளும் விகிதம் குறைந்து உள்ளது. பெண்கள் ஒரு குழந்தைகளை மட்டுமே பெற்று கொள்கின்றனர்.
குழந்தை பிறப்பு குறைவதை கட்டுப்படுத்தவும், உள்ளூர் மக்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ளவும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.அரசு பணியில் உள்ள பெண்கள் 2வது குழந்தைகள் பெற்றால் சிறப்பு ஊதிய உயர்வும், 3வது குழந்தை பெற்று கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும்.
சிக்கிமில் வாழும் சாமானிய மக்கள் ஒரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் இந்த நிதியுதவி திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மருத்துவ காரணங்களால் குழந்தை பெற்று கொள்ள முடியாத பெண்களுக்காக மருத்துவமனைகளில் செயற்கை கருவூட்டல் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு பிரேம் சிங் தமாங் கூறினார்.
![]()