காதலன் கழுத்தில் கத்தி , இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 12 மணிநேர வேட்டையில்; சிக்கிய சிங்கங்கள்!

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும், மாணவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில், உள்ள குண்டுகுளம் என்னுமிடத்தில் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக மது அருந்திவிட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல், காதலன் மற்றும் காதலி ஆகிய இருவரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனை அடுத்து அந்த 6 பேர் காதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதால் செய்வது அறியாமல் காதலன் கதறி உள்ளார். இருந்தும் , அந்த மர்ம கும்பல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இது குறித்து காவல் துறைக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றாலும், சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், விசாரணை நடத்தினர். குறிப்பாக காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் தாமாகவே இந்த புகாரை கையில் எடுத்து, விசாரணையை துரிதப்படுத்தினர்.

மேலும், இதே பகுதியில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அந்தப் பகுதியில் தினமும் மது அருந்தும் நபர்கள், ஆடு மற்றும் மாடு மேய்ப்பவர்கள் உள்ளிட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கும்பல் ஒன்று அடிக்கடி , இந்த பகுதியில் சுற்றி திரிவது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இவர்கள் மீது காவல்துறைக்கு  சந்தேகம் எழவே, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்க முயற்சி செய்தபோது, அவர்கள் அந்த பகுதியிலிருந்து தப்பி தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அந்த கும்பல் காஞ்சிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தமிழரசன் என்பவரை தவிர மற்ற 5 பேர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை துரத்திப் பிடிக்க முயற்சி செய்தபோது. கீழே விழுந்து 3 பேருக்கு கால்களிலும் 2 பேருக்கு கையும் உடைந்தது. விமல் குமார்(25) ஊமை (எ) மணிகண்டன் , விக்கி (எ) விக்னேஷ்(22) மரம் (எ) தென்னரசு(19) ஊக்கு (எ) சிவகுமார்(22) மற்றும் தமிழரசன் ஆகிய 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இதனை அடுத்து கை, கால் உடைந்தவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டு விட்டனர். புகார் கொடுப்பதற்கு முன்பாகவே காவல்துறையினர் விசாரணையில், கையில் எடுத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேரை 12 மணிநேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button