வேடிக்கை விளங்கவில்லை!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

இறக்கைகள் இருக்கும் பறவைகள் யாவும் பறப்பதில்லை
முட்டையிடுவது எல்லாம் குஞ்சு பொரிப்பதுஇல்லைஓடுபவரெல்லாம் ஓட்டப்பந்தயமதில் கலந்துஒடுவதில்லைகோவிலுக்குப் போவோரெலாம் வீடுபெறும்உறுதியுமில்லைநட்டெதெலாம் பயிராகும் என்ற எண்ணம்பலிப்பதுமில்லைகுட்டக் குட்ட குனிந்திருப்பான் என்பெதும் எப்போதுமில்லைசுட்டுக் கொல்பவன் எல்லாம் வேடனாயும்இருப்பதில்லைதட்டிக் கொடுப்பவன் எல்லாம் தலைநிமிர உதவுவதில்லைபடைப்புயாவும் படைப்புக்களாய் போற்றப்படுவதில்லைஉடைப்புக்கள் நிறைந்த கண்மாயில் நீர்சேரவழியில்லைகொடையாளி என்பவனும் கொலையாளி ஆனால் நலனில்லைமடைதிறந்து நீர்பாய்ந்தும் பயிர் அழிந்தால் பலனில்லைதாய்மொழியில் பற்றில்லா தன்மையுள்ளோர்மக்களில்லைவாய்ச்சொல் வீரராய் வாழ்ந்து மடிவதிலும் பொருளில்லைதூய்மையில் நாட்டமில்லாதோர் துப்புறவை ஏற்பதில்லைவாய்மை வழிநின்று செல்பவர் வழிதவறிச் செல்வதில்லைஇந்நீநி எல்லார்க்கும் எப்போதும் தெரியாதுபோனதில்லைஅந்நாள்முதல் இந்நாள்வரை சான்றோரவர்புகழ்வதில்லைசந்தியில் நின்று கொண்டு சதிராடுபவரைப்புரியவில்லைவிந்தையாம் அவர்செய்யும் வேடிக்கையும் விளங்கவில்லை-சங்கர சுப்பிரமணியன்.
![]()