கவிதைகள்
நிலையாமையறியா நிலையற்ற மனிதா!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

வள்ளுவன் சொன்ன நிலையாமை பற்றிசிலையாயினர் சிறிதளவும் எண்ணாமல்உணர்ந்தேன் நானுமதன் தத்துவத்தைவாழ்விலிருந்தே அதைக் கற்றறிந்தேன்பிறந்தவீடும் எனக்கு சொந்தமில்லையேஎன்னைப் பெற்றவயிறும் இன்றில்லையேவளர்த்த தந்தையும் பாதிவழி வரையிலேகாதறுந்த ஊசியும்வரா கடைத்தெருவிலே
கற்றுக்கொடுத்த ஆசான் உயிரோடில்லைபற்றுக் கொண்டோரில் பாதிகூட இல்லைவற்றிப்போன உடலோ வனப்புடன் இல்லைசுற்றித்திரிந்த நாட்களும் சுகம் தரவில்லைஉண்டஉணவு ஒழுங்காய் செரிக்வில்லைகண்டகாட்சிகள் எதுவும் நினைவிலில்லைமுண்டமாய் வாழ்வும் முடிவற்றுப் போகுதேஅண்டமதில் எதை நான் எடுத்து செல்வேன்வந்தாரைத் தாங்கும் வளமானமண் இதுவும்எந்நாளும் தாங்காது இருளுக்குள் ஆழ்த்தும்அந்நாளை எண்ணி அறியாமல் இருப்போரேவந்திடுமா பொன் பொருள் மனை உம்மோடு!-சங்கர சுப்பிரமணியன்.
![]()