இலக்கியச்சோலை

என் அன்புத் தோழர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி!… செ.விஜய தாரிணி.

கவிதை எழுதுவது சுலபமா…
கடினமா…?
அவருக்கு நான் சொன்ன பதில்…
சுலபம் தான்…
கொஞ்சம் கற்பனைத் திறன்…
நிறைய எதுகை மோனை அறிவு இருந்தால் போதும்…
கவிதைகளை சரளமாக படைக்கலாம் என்றேன்…
கற்பனைத் திறன் உங்கள் அனைவருக்கும் தெரியும்…
அது என்ன எதுகை மோனை அறிவு…
ஒரே அலைவரிசை வார்த்தைகளை பயன்படுத்துவது…
உதாரணமாக…
எண்ணம் திண்ணம்…
காலை மாலை…
வரைந்தது கரைந்தது…
மை கொண்டு யாரம்மா உன் விழிகளை வரைந்தது…
பார்த்ததும் என் மனமல்லவா கரைந்தது…
கவனியுங்கள்…
வரைந்தது…கரைந்தது…
நங்கூரம் இல்லா கப்பல்
நடுக்கடலில் நில்லாது…
நம்பிக்கை இல்லா உன் வாழ்வு
நாநிலத்தில் செல்லாது…
கவனியுங்கள்…
நில்லாது…செல்லாது…
அப்புறம் ஒரு எழுத்தைக்கொண்டு வாக்கியங்கள் அமைப்பது…
உதாரணமாக…
ஐயமின்றி வாழ்ந்திடவே
ஐம் புலன்கள் அடக்கியே
ஐங்கரனை தொழுதாலும்
மூன்று வேளை பிரசாதம்
முப்போகம் படைத்தாலும்
தெய்வம் அதை உண்ணாது
நாட்டினிலே நல்லவன் என்றே
அத் தெய்வம் உன்னை எண்ணாது…
இது தான்…
இது தான் கவிதை…
தொடங்கும் வரை கொஞ்சம் குழப்பும்…
தொடங்கிவிட்டால் உங்களின் எழுதுகோலில் வார்த்தைகளின் அடை மழை தான்…
முயலுங்கள்…
முன்னேறுங்கள்…
என்றும் அன்புடன்…
சங்கத்தமிழுடன் சங்கமித்து…
கன்னித்தமிழைக் காதலித்து…
முத்தமிழை முத்தமிட்டு…
மூச்சுள்ளவரை வாழும்…
உங்கள் அன்புத் தோழி…
செ.விஜய தாரிணி
May be an image of 1 person, standing, footwear and indoor

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *