போதைப் பொருள் கடத்தும் ஆளில்லா நீர்மூழ்கி பறிமுதல்!
மொரோக்கோவில் இருந்து கடல் வழியாக போதைப் பொருள் கடத்துவதற்கு கட்டப்பட்ட கடலுக்கடியால் செல்லும் மூன்று ட்ரோன்களை ஸ்பெயின் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ஆளில்லா நீர்மூழ்கிகளில் 200 கிலோ சரக்குகளை எடுத்துச் செல்ல முடியுமாக உள்ளன.
இது தொடர்பில் 14 மாதங்கள் இடம்பெற்ற விசாரணைகளில் கார்டிஸ், மலகா மற்றும் பார்சிலோனா நகரங்களில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாகனங்களை கட்டியதாக சந்தேகிக்கப்படும் கும்பலை தாம் பிடித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பா எங்கும் போதைக் கடத்தல்காரர்களுக்கு போதைப் பொருட்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் இருந்து மொரோக்கோவை பிரிக்கும் குறுகிய கடல் பகுதியான ஜிப்ரால்டர் நீரிணையில் இந்த ஆளில்லா நீர்மூழ்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
![]()