சங்கதிகள்

பிரதமராக தந்தை….. முதல்வராக மகன் ….. ராவ் புதிய கட்சி துவக்கம்!

தேசிய அரசியலில் தடம்பதிப்பதற்காக இம் மாத இறுதிக்குள் புதிய கட்சி துவங்க உள்ளார்தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்.

தெலங்கானா மாநிலம் உதயமானது முதல் மாநில முதல்வராக இருந்து வருபவர் சந்திரசேகரராவ். இவரது கவனம் தற்போது தேசிய அரசியலை நோக்கி திரும்பி உள்ளது. இதற்காக இம்மாத இறுதிக்குள் புதிய கட்சியை துவக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாநிலத்தையும் அவர் விட்டு விட தயாராக இல்லை. இதற்காக தற்போது மாநில அளவில் உள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவராகவும் , மாநில முதல்வராகவும் தன்னுடைய மகனும் எம்.எல்.ஏ.,வுமான ராமராவை இருக்கும் வகையில் தயார் படுத்தி வருகிறார்.

இதனிடையே இம் மாத இறுதிக்குள் புதிய கட்சியை துவக்க திட்டமிட்டு உள்ளார். அதற்கு பெயரும் முடிவாகி உள்ளது. பாரதிய ராஷ்ட்ரா சமிதி என பெயரிட்டுள்ளார். வரும் 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லி., தொகுதியில் போட்டியிடும் வகையில் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக உ.பி., முன்னாள் முதல்வரும் சமஜ்வாடிகட்சி தலைவருமான அகிலேஷ்யாதவ், டில்லி முதல்வரும் , ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த்கெஜ்ரிவால் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரும் முன்னாள் முதல்வருமான ஜனதா தள கட்சியை சேர்ந்த தேவகவுடா உள்ளிட்டோரை சந்தித்து வந்துள்ளார். மேலும் பல்வேறு சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளில் வாழும் தெலங்கானா மக்களின் ஆதரவை பெறும் விதமான நடவடிக்கைகளிலும் ராவ் இறங்கி உள்ளார். இதற்காக கட்சியின் என்.ஆர்.ஐ., ஒருங்கிணைப்பாளரான கணேஷ் என்பவர் ஜூம் மீட்டங் மூலம் என் ஆர்ஜ.,க்களின் ஆதரவை திரட்டி வரும் பணியை செய்து வருகிறார்.

 

Loading

Back to top button