கவிதைகள்

பார்புகழ அக்கினிக்குஞ்சு வாழ்க!… சங்கர சுப்பிரமணியன்.

வெற்றிவாகை சூடினாய் நீயும் நன்று 
இதை விடுத்து இப்புவியிலே என்று
வேறொரு செயலுமுண்டோ ஒன்று
சொல்லிடு அக்கினிக்குஞ்சே இன்று

நிலமதில் அங்கொன்று கண்டேன்
நெடிதுயர்ந்த தருவாய் நின்றதுவே
பூவென்றும் காய் கனிகள் என்றும்
பொலிவாக மிளிர காட்சி தந்ததுவே

இம்மண்ணிலும் அதற்கிணையாகவே
மாசில்லா இணையதளம் கண்டேன்
கவிதை கட்டுரை கதைகள் யாவனவும்
களமதில் கொண்டு சீரொடு திகழ்ந்ததே

சான்றென பகர்ந்திட எவர் வேண்டினும்
ஒன்றல்ல இரண்டல்ல நாம் கூறிடுவோம்
பத்தாண்டுகளை பார் புகழக் கடந்துமே
பதினோறாம் ஆண்டில் தடம் பதித்ததுவே

நம் அக்கினக்குஞ்சை நாம் போற்றுவோம்
அதன் அருமை பெருமைகளை பாராட்டியே
ஊர்கூடி தேரிழுத்து மகிழ்ந்தாடுதல் போல
பார்கூடி அக்கினிக்குஞ்சை வாழ்த்துவோம்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *