கவிதைகள்

பலர் கடை விரித்தனர்!… ( கவிதை ) …. முல்லைஅமுதன்.

பலர் கடை விரித்தனர்.
கண்கவர் விருந்தாய் நூல்கள்..
வண்ணத்துப்பூச்சிகளின் கனவுடன்
எழுத்தர்களின் அணிவரிசை நூல்களாய்
இறைந்துகிடந்தன..
வாங்கிவர்கள் பலராய்..
வேடிக்கை பார்த்தவர்கள் சிலராய்..
அரட்டை அடிக்கவே வந்தவர்கள் அதில் ஒரு சிலர்..
அரசியல் முடிவுகளை தீர்க்கமாய்
சொல்லிவிடத்துடிக்கும் பெரிசுகள்…
அன்றைய விற்பனையை சரிபார்க்கும் வியாபாரிகள்..
நூலக ஆணை கிடைத்ததாய் சொல்லிச் செல்லும் சிலர்..
எல்லாம் முடிந்தது..
வெற்றுப் பெட்டிகளுடன் கலைந்து சென்றனர்..யாவரும்.
வழமை போல
ஒன்றுமே
விற்கவில்லை
என பதிப்பகம் கைவிரிக்க..
மீண்டுமொரு சுடுநீரில் மூழ்கி இறந்தது மனசு..

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *