கவிதைகள்

ஆதலினால்!… ( கவிதை ) …. முல்லைஅமுதன்.

எங்களின் வளவில் தான்
எல்லாம் வளர்ந்தன..
புல்லாகியும்,மரமாகியும்
எங்களுக்காக
மரம்வளைந்து கொடுத்து
இளமையை ஆராதித்ததும்
சில காலம்தான்.

என் காதலுக்கு இசைந்து கொடுத்தது புற்கள்.
காலம் அனைத்தையும் உருமாற்றியது.
மரம் அனைவரின் ஆசிர்வாததுடனும்
அரியணையேறியது.

எங்களின்
ரகசியங்களைத் தெரிந்த மரம்
புற்களைத் துணைக்கழைத்து கொண்டு வருக என்றதும்…
புற்கள்
எங்களைக் கொன்றே எடுத்துச் சென்றது.

மந்திரிகள் சொன்னார்கள்,
‘மன்னா!.கொன்றே வந்தவர்களை
சிரச்சேதம் செய்யவேண்டாம்.
வேரோடு எரிப்பதே சிறந்தது…
எப்போதும் புற்களின் வேர்கள்
உயிர்ப்புடன் இருப்பவை..
ஆதலினால்…

முல்லைஅமுதன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *