கவிதைகள்

இதயத்தைத் திறப்போம்!… ( கவிதை ) …. அகரம்; செ.துஜியந்தன்.

காற்றும் ஆகாயமும் சுத்தமாக!
காட்டு விலங்குகள் களிப்படைந்தன
இயற்கையும் இறைவனும் கண்ணுக்குத் தெரிந்தது
சுற்றும் பூமியில் சுகம் தேடி சுற்றம் மறந்து
நித்தமும் ஆலாயப் பறந்த மனிதன்!

 

சுத்தம் சுற்றம் பற்றியே சிந்திக்கின்றான்
பட்டம் பதவி பகட்டு வாழ்க்கை
பாழ்பட்ட பூமியில் அத்தனையும் பொய்தான்.

 

அன்பும் ஜீவகாருண்யமும் ஒன்றே மெய்யாகும்
அதுவே ஆன்ம ஈடேற்றத்தின் திறவுகோல்
என்றுணர்ந்து கொண்டான்

 

முடிவில்
மண்ணில் மாண்டுபோன மனித நேயத்தை
மீண்டும் துளிர்க்கச் செய்த
நுண் கிருமி கொரோனாவினால்
மனித இதயக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
நன்று நன்று நம் மாநிலம் வாழ்க

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *