கவிதைகள்
எரிகிறது மனம்!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

எல்லா குழந்தைகளும் மகிழ்ந்து இருக்க
நான் மட்டும் சோகத்தால் வாடி நின்றேன்
என் அப்பா என்றவர்கள் சொல்லும்போது
என்அப்பாவை நான் அங்கே தேடலானேன்
பள்ளிக்கு அழைத்து செல்ல அப்பாவுண்டு
இப்பாவிக்கு அப்படி என்று யாரும் இல்லை
அப்பாவை நான் இதுவரை பார்த்ததில்லை
எங்கே என்றால் என்தாயிடம் பதிலுமில்லை
பல தடவை அம்மாவிடம் கேட்டுவிட்டேன்
புடவை தலைப்பால் வாய்மூடி விம்முகிறாள்
அப்பாவியாய் நான் அவளைப் பார்த்தாலோ
என்னை கட்டியணைத்து அவள்அழுகிறாள்
வீட்டுவேலை கட்டிட வேலை பலவும் செய்து… 
கொட்டும்மழை கோடைவெயிலும் பாராது
மட்டு மரியாதையடன் மாண்பொடு வளர்க்க
எட்டாப் புகழோடு வானில் பறக்கின்றேன்
எவ்வளவு சிறப்படைந்து நான் நின்றாலும்
என்தாயை வஞ்சித்து தலைகுனிய வைத்த
அம்மாமனிதரை தலைமீது தூக்கி வையாது
தந்தைசொல் மந்திரமிலை என்றால் நன்று!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()