ஏங்கிடும் மனது!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

மடிசுமந்து பெற்று
பாலூட்டி சீராட்டி
வளர்த்திடுவாள் அன்னை
மடியில் ஆசையோடு அமர்த்தி
அன்புடனே கொஞ்சி
அகம் மகிழ்வார் தந்தை
இன்னொரு தாயைப்போல்
இடுப்பில் இருத்தி
இங்குமங்கும் சுற்றிடும் அக்கா
கைபிடுத்து அழத்துச் சென்று
கடைக்கும் போய்விடுவான்
கேட்பதெல்லாம் வாங்கித் தருவான்
அண்ணன் வருவான் என்றும
அன்புடனே சீர் கொடுப்பான் என
அன்போடு காத்திருப்பாள் தங்கை
விளையாடச் சென்றால்
விரும்பி அழைத்துச் செல்வானென
வீற்றிருப்பான் தம்பி
எப்போதிவரை எல்லாம் காண்பேன்
எங்கிவரை சென்று பார்ப்பேன்
என்னவன்று சோல்லி நான் அழுவேன்
முட்பதர்ககளை பார்க்கும் போதும் ![]()
குப்பைத் தொட்டிகளை காணும்போதும்
கோவில் வாசல்களை கடக்கும் போதும்
என் எண்ணமெல்லாம் சிதறிப் போகுதே
என் கண்கள் குளமாகி நீர் தேங்குதே
சொந்தங்களை எனக்கிலாது ஆக்கிய
உன் சுயநலத்தை எவ்விதம் சொல்வேன்
தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று!
– சங்கர சுப்பிரமணியன்.
![]()