கவிதைகள்
நெஞ்சார இறைவேண்டி வாழ்த்துகிறேன் நானும்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

அம்பி ஐயா பாட்டு அழகான பாட்டு
அன்பு பண்பு அள்ளித்தரும் அழகானபாட்டு
மண்மணக்க வாசந்தரும் மகத்தான பாடு
பாடிநிற்கும் அம்பி ஐயா பல்லாண்டுவாழ்க !
தொட்டவுடன் தமிழ்மணக்கும் சுந்தரமாம் பாட்டு
கட்டழகுச் சொற்களுடன் கலகலக்கும் பாட்டு
இட்டமுடன் படிப்பதற்கு ஏற்றதமிழ்ப் பாட்டு
இன்பமுடன் என்னாளும் அம்பிஐயா வாழ்க ! 
ஆங்கிலத்தில் கவிபுனையும் ஆற்றல்மிகு ஐயா
ஆனந்தம் அகமகிழ்வு பெறவேண்டும் வாழ்வில்
நீள்புவியில் நீண்டசுகம் பெறவேண்டும் என்று
நெஞ்சார இறைவேண்டி வாழ்த்துகிறேன் நானும் !
![]()