கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 18….. (உண்மைக் கதை)…. ஏலையா க.முருகதாசன்!…

நேற்று சோர்வுடன் போன யோகமலர் இன்று வழமைக்கு மாறாக உற்சாகமாக இருந்தாள்.தனது மிசின் இருந்த இருக்கையில் உட்கார்ந்து எனது மனைவி கம்பாயம் உடுத்து எடுத்தனுப்பிய படத்தை சில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு „அக்கா கொடுத்து வச்சவங்க இப்படி ஒரு புருசன் கிடைக்க’ என்று தொடர்ந்து தனது மனைவியை அழகுபடுத்தி பார்க்கும் உங்களை எனக்கும் புருசனாக காட்டியிருக்கிறார் என்ரை மாரியம்மன் என்றவள் படத்தை நான் கொண்டு போறேங்க என்றாள்.நாங்க ஒன்னா இருக்கப்போ அக்காவோட படத்தோட என்னோட படத்தையும் எங்க பெட்ரூமில வைப்பேங்க என்றாள்.

நாளக்கு உங்க மச்சாளோட மகளுடன் படத்துக்கு போறமல்லவா.நாளக்கு கம்பாயம் உடுத்திட்டு வருவேணுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேலை தொடங்குவதற்கான மணி அடித்தது.

அவளும் வேலை செய்யத் தொடங்க நானும் சாவியும் கையுமாக ஏதாவது மிசின் பிழையாகி நிற்கின்றதா என அங்குமிங்குமாக நடப்பதும் கதிரையில் போய் இருப்பதுமாக இருந்தன்.

அப்பொழுது அகமட் என்னருகில் வந்து இஸ் எவிறி திங் இஸ் ஓகே என்றார்.யேஸ் என்று பதில் சொன்னன்.அதைக் கவனித்த யோகமலர் அவர் என்னைவிட்டு அகன்றதும் கண்களால் தன்னருகில் வரச் சொல்லி சைகை செய்தாள்.

அவளுக்குக் கிட்டப் போனதும் „அகமட் என்ன பேசினாங்க „என்றாள்.எல்லாம் ஓகேயா என்று கேட்டார் என்றன்.அதற்கு நீங்க என்ன சொன்னீங்க என்று கேட்டாள்,எல்லாம் ஓகே என்றேன்,அதற்கு இதச் சொன்னீங்களா என்று கழுத்துக்குப்

பின்புறம் கைகள் இரண்டையும் கொண்டு போய் முடிச்சுப் போடுவது போலக் காட்டி இதையும் சொன்னீங்களா என்றாள்.இதை யாராவது சொல்வாங்களா இது எங்கடை பேர்சனல் விசயமல்லவா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மேலேயிருந்து அமெரிக்க கெட் பார்ப்பதைக் கண்டதும் மேலேயிருந்து அமெரிக்க கெட் பார்க்கிறார் என்று அவளுக்குச் சொல்ல அவளும் நிமிர்ந்து பார்த்து போங்க என்று சொல்ல அந்த இடத்தைவிட்டு நான் விலகிச் சென்று விட்டன்.

படியைவிட்டு இறங்கி வந்த அமெரிக்க கெட் அகமட்டையும் கூட்டிக் கொண்டு என்னருகில் வந்தவர் உதிரிப் பாகத்தை உற்பத்தி செய்யும் பகுதி மிசினை இயக்கும் இருவரில் ஒருவர் வரவில்லை என்பதால் அதனை என்னைக் கொண்டு இயக்கும்படி சொல்லிவிட்டு அவர் போய்விட, நான் அவளைத் திரும்பிப் பார்த்து அங்கு வேலை என்பது போல விரலால் இடது பக்கம் காட்ட சரி என்பது போல அவள் தலையாட்டினாள்.

நான் அங்கு வேலை என்று கைவிரலால் சைகை செய்து சொன்னதை அகமட் கண்டு புன்னகைத்தபடியே என்னையம் கூட்டிக் கொண்டு உதிரிப் பாகம் செய்ய வேண்டிய மிசினைக் காட்டிக் கொண்டிருக்க, நான்கு மிசின்களுக்கப்பால் வேலை செய்து கொண்டிருந்த மிசினிலிருந்து வெளிவரும் வேறொரு உதிரிப் பாகத்தினை தரம் பார்த்துக் கொண்டிருந்த மலாய்ப் பெண்ணான ஆசா நாங்கள் நின்றிருந்த மிசினை நோக்கி வந்தவளிடம் „இந்த மிசினை இவர் ஓடவிடப் போகிறார்’ எனச் சொல்லிவிட்டு அகமட் போய்விட, நான் அதற்குரிய தகட்டு வளையத்தை மிசினில் பொருத்தி மிசினை ஓடவிட்டு உதிரிப் பாகங்கள் வெட்டிவிழும் வரை காத்திருந்தவள் அவற்றிலிருந்து ஐந்து பாகங்களை எடுத்து அவற்றின் அளவினை அளந்து பாரத்துச் சரியெனச் சொன்னாள்.

 

என்னருகில் வந்தவள்’ அடுத்த கிழமைக்கு அடுத்த கிழமை நீங்களும் மலேசியன் பெண்டாட்டியும் ஒன்றாக ஒரே வீட்டில்

வாழப் போகிறீர்கள், கண்ணைச் சிமிட்டி அப்படித்தானே என்றாள்.

அவளிடம் அதிகம்; பேச்சுக் கொடுக்கக்கூடாது என்று நினைத்த நான் ஒம் என்பது போல தலையை மட்டுமே ஆட்டினன்.

யோகமலர் தனது மிசினிலிருந்து நான் வேலை செய்யும் பகுதிப் பெரிய மிசின்களின் இடைவெளிக்கூடாக ஆசாவும் நானும் கதைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதைக் கண்ட நான், ஆசாவிடம் ஒரு நிமிசம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டு யோகமலர் இருந்த இடத்திற்கு போக எத்தனிக்க „உங்களுடைய மலேசியன் பெண்டாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் விளக்கம் சொல்லப் போறீங்களா போங்கள் நான் பார்த்துக் கொள்கிறன் என்று ஆசா சொல்வதைக் கேட்டுக் கொண்டே வேகமாக அவளிருந்த இடத்திற்குப் போக „ என்னவாம் அந்தக் குவாலிற்றிக் கொன்ரோலர்’ என்றாள் யோகமலர்.

„அடுத்த கிழமைக்கு அடுத்த கிழமை ஒன்றாக ஒரே வீட்டிலேயே நாங்கள் இரண்டு பேரும் இருக்கப் போகிறீர்களாமே என்று கேட்டாள்’ என்று சொன்ன நான் „சரி சாப்பாட்டு நேரம் மிகுதியைப் பேசிக் கொள்வோம் என்று சொல்ல போங்க போய் மிசினைக் கவனமாகப் பாருங்க, அவளோட பேச்சைக் குறைங்க’ என்று அவள் எனக்குக் கட்டளை இடுவது போல சொல்ல „ம் சரி’ என்று சொல்லிக் கொண்டே மிசினடிக்குப் போனன்.

சாப்பாட்டு இடைவேளை வந்தது.சுவரோடு சாய்ந்திருந்தபடியே யோகமலர் மீண்டும் தனது கைப் பைக்குள்ளிருந்து எனது மனைவியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவள்’ அக்கா சுப்பராக இருக்காங்க’ என்று சந்தோசமாகச் சொன்னவள்,நான் அக்காவின் படத்தை

அண்ணிமாருக்கு காட்டக் கொண்டு போறேங்க ஓகேதானே என்றாள்.

நான்’ ஓகே…நோ புரபொளம்’ என்றன்.இன்னோட எனக்கு என் புருசன நினைச்ச கவல தீர்ந்துட்டு இனி நீங்க இரவு வேலக்கு போகமாட்டீங்க அததான் „ என்றவள் பிளாஸ்ரிக் பையொன்றில் மொலக்சில் சாப்பிட வேண்டிய சாப்பாட்டை எடுத்து எனக்கு முன்னாள் வைத்துக் கொண்டே உள்ளே மூனு பூரி உருளைக்கிழங்கு கறி வைச்சு மடிச்சு வைச்சிருங்கேங்க வாழைப்பழம் கோப்பி எல்லாம் இருக்குங்க சாப்பிடுங்க என்றவள்….

வேல முடிஞ்சு சீக்கரமா வீட்டுக்குப் போயிட்டு கோவிலுக்கு போகச் சந்திச்சோமே அந்த பஸ் கோல்ரடிக்கு வாங்க, அங்க நானும் பிரண்ட்டொருத்தியும் வருவேணுங்க அப்புறமா உங்க மச்சாளின் மகளின் வீட்டுக்குப் போய் அவங்களயும் கூட்டிட்டுப் போவோம்ங்க என்று சொன்னவள் பெரிய சாப்பாட்டுப் பெட்டியைத் திறந்து முட்டை போடாத சாண்ட்விச்சை எடுத்துச் சாப்பிடச் சொல்லி தானும் சாப்பிட்டாள்.

மிகவும் சுவையாகவிருந்தது.சுவையின் மூலம் என்னென்ன சாண்ட்விச்சுக்குள் வைச்சிருக்கிறாள் என்பதை உணர்ந்த நான் „ இது உள்ளை கத்தரிக்காயும் பீட்ரூட்டும் கரட்டும் பொரிச்சு சீசை சின்னது சின்னதாய் உதிர்த்தி வைச்சு செய்தனீங்களா’ என்றன். ஆமாங்க சாப்பாடு செய்வதிலயும் கிரியேட்டிவ் வேணும்ங்க,எனக்கு டிபிரண்டாச் சமைக்க விருப்பங்க.உங்களுக்கு நான் விதம் விதமாச் சமைச்சு தருவேங்க,அக்காவும் ரேஸ்ற்றா சமைப்பாங்களா என்றவளுக்கு „அவா நல்ல ருசியாச் சமைப்பா,அவையின்ரை வீட்ல என்னுடைய மனைவியும் அவருடைய அக்காவும் நல்ல ருசியாச் சமைப்பினம் என்றவுடன், நீங்க கொடுத்து வைச்சனீங்க,வள்ளி தெய்வான மாதிரி இரண்டு மனைவிங்க இரண்டு பேருமே நல்லா சமைப்பவங்க,நீங்க லக் உள்ளவங்க என்றவள் திடீரென அமைதியானவளின் முகம் சோர்வடைய

„அக்காவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினீங்க,அதுள்ள நான் வந்தது எனக்கு கில்ரியாயிருக்கு.ஆனா நான் உங்களுக்கு பெண்டாட்டியா வாழவே ஆசைப்படுறன்….நீங்க என்ன வெறுத்தாலும் உடனே செத்திடுவன்,உங்களோட கொஞ்ச மாதங்களாவது வாழ்ந்திட்டு உங்க முன்னால செத்திடுவேணுங்க….என்றவள் வழமை போல என் தோள் மீது தலையை வைச்சு அழுதாள்.

„நீங்க எனக்குத் தாலி கட்ட ஓகே சொன்னதை அண்ணிமாருக்கு ரெலிபோனிலை சொன்னேங்க, அவங்க நம்பேலங்க அவர் உனக்குத் தெய்வம் என்றாங்க.ஊரில மனைவி பிள்ளைங்க இருக்கப்போ இப்படி யாருமே செய்ய மாட்டாங்க, அவரு உன்னோட கௌரவத்திற்காக இதைச் செய்கிறார் „என்று சொன்னாங்க என்றவள் பிறகு அமைதியானாள்.

„இன்னயவிட இன்னும் நாலு நாட்கள்தான் நாங்க இரண்டு பேரும் இங்க வேல செய்வோம்ங்க,அவங்க என்ன சொன்னாலும் செய்யுங்க.அகமட்டும் பேர்சனல் மனேஜரும் செய்த கெல்ப்பை நாம ஸ்பொயில் ஆக்காம பார்த்திடனும்ங்க,ஆமா இன்ரவேலுக்குப் அப்புறமும் புரடக்சன் ஏரியாவிலேயே வேலை என்றாள்.

„அங்கதான்’ என்று சொல்ல.அந்த வேல உங்களுக்குப் பிடிச்சிருக்கா என்றாள்.எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருக்கு என்றன்.தனது கைகளை எனது கைகளுக்குள் செருகியபடியே நீங்க இன்னும் கோப்பி குடிக்கல என்றவள் எனது கைக்குள் இருந்து தனது கைகளை எடுத்து கோப்பி வார்த்துத் தந்தாள்.

„ஆமா நாளக்கு என்ன படம் பார்க்கப் போறோம் „ என்று கேட்டவளுக்கு பாரதிராஜா டைரக்சனில் டிக் டிக் டிக் படம் வந்திருக்கு, கமலகாசன் நடிச்ச படம்,பாரதிராஜாவின் படம் என்றால் ஏதாவது புதுமையிருக்கும் அதைப் போய்ப் பார்ப்பம்,படம் பார்த்திட்டு ஏதாவது கடையிலை சாப்பிடுவம்’

என்றதற்கு அவள் உங்களுக்குப் பாரதிராஜா படம் என்றால் பிடிக்குமா என்றாள்.

„பிடிக்கும்’; என்ற நான் உங்களுக்குப் பிடிக்காதா,பிடிக்காவிட்டால் வேற படத்திற்குப் போவமா என்றன்.

„இந்தப் படத்தையே பார்ப்போம்ங்க,கிரியேட்டிவ் படம்னா எனக்கும் பிடிக்கும்’ என்று சொன்னவள் „உங்க மச்சாளின்ரை மகள் ஏதாவது பேசினால் நானும் பேசுவேணுங்க’ என்றவளுக்கு அப்படி ஒன்னும் நடக்காது யோசிக்க வேண்டாம் என்று அவளை ஆறுதல் படுத்தினேன்.

அவள்; „அக்கா படத்தோட லெட்டர் போடலையா’ என்று கேட்டதும், போட்டிருந்தா நாளைக்கு வருகிற போது கொண்டு வாறன் என்று பதில் சொல்ல, என்னை இறுக்கி அணைத்து உங்க பெண்டாட்டி என்ற உரிமையோட ஒரே வீட்ல வாழப் போறதை நினைச்சா ரொம்ப மகிழ்ச்சியாயிருக்குதுங்க மாரியம்மா எனக்கும் உங்களுக்கும் துணை செய்வாங்க’ என்று நெக்குருகினாள்..

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *